தீவிரபோக்குடைய இந்தியர்கள் ஐ. எஸ் அமைப்பில் இணைய ஆப்கானிஸ்தான் செல்லும் பாதையாக விளங்கும் யாழ்ப்பாணம்
ஆப்னிகானிஸ்தான் சென்று ஐ எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர முயலும் தீவிர போக்குடைய இந்தியர்களுக்கான ஒரு பாதையாக யாழ்ப்பாணம் விளங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் மரபு ரீதியான பாதை வழியாக பங்களாதேஷ் அல்லது டுபாய் இருந்து வருகிறது. ஆனால் இந்த இரண்டு பாதைகளும் கண்காணிக்கப்படுவதால் யாழ்ப்பாணம் பயன்படுத்தப்படுவதாகவும் இது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் தெரியவருகிறது.
ஐ. எஸ் அமைப்பில் இணைவதற்க்காக அஸ்பக் என்ற 21 வயது கேரள இளைஞர் இலங்கை வழியாக கடந்த மாதம் ஆப்னிகானிஸ்தானுக்கு சென்றதாகவும் இவ்வாறு இலங்கை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் வழியாக யாழ்ப்பாணம் பயன்படுத்தப்படுவதாகவும் இந்திய அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
அஸ்பக் என்ற இந்த இளைஞர் ஐ. எஸ் அமைப்பில் இணைவதற்கு கேரளாவை சேர்ந்த இரு முஸ்லிம்கள் தான் காரணம் என்று அஸ்பக்கின் தந்தை அஸ்பக் கதீர் அஹமட் மும்பை பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். இதுதொடர்பில் விசாரணை செய்வதற்க்காக மும்பை போலீசார் விரைவில் கேரளா செல்ல உள்ளனர்.




