செய்திகள்
துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் இவ்வாண்டு ஆறாயிரத்து 665 ஏக்கரில் காலபோக செய்கை
முல்லைத்தீவு துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் இவ்வாண்டு ஆறாயிரத்து 665 ஏக்கர் நிலப்பகுதிகளில் காலபோக செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் இவ்வாண்டு சுமார் ஆறாயிரத்து 665 ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது வவுனிக்குளத்தின் கீழ் இரண்டாயிரத்து 14 ஏக்கரும் ஒன்பது நடுத்தர குளங்களின் கீழ் மூவாயிரத்து 473 ஏக்கரும் பதினைந்து சிறிய குளங்களின் கீழ் 892 ஏக்கரும் மானாவாரி செய்கை நிலங்களில் 286 ஏக்கரும் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதாவது பாரிய நீர்ப்பாசனக்குளமான வவுனிக்குளத்தின் கீழ் உள்ள ஆறாயிரம் ஏக்கரில் துணுக்;காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள பகுதிகளிலும் மல்லாவிக் குளம், தேறாங்கண்டல் குளம, ஐயன்கன் குளம், மருதன் குளம், தென்னியன் குளம், கல்விளான் குளம், கோட்டைகட்டிய குளம், அம்பலப்பெருமாள் குளம், பழையமுறிகண்டி குளம், ஆகிய ஒன்பது நடுத்தரகுளங்களிலும் துணுக்காய் குளம் முருங்கன் குளம், கரம்மைக் குளம், ஆலங்குளம் உயிலங்குளம், வேட்டையடைப்பு குளம் புத்துவெட்டுவான் குளம், மணல்குளம், உள்ளிட்ட பதினைந்து வரையான சிறிய குளங்களின் கீழும் மேற்படி காலபோக செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
n10




