துப்பாக்கி பிரயோகத்தின் மத்தியில் மகளை தேடினோம்- துருக்கி விமானநிலையத்தின் பயங்கர அனுபவங்கள்
கடந்த செவ்வாய்கிழமை துருக்கியின் இஸ்தான்புல் விமானநிலையம் இனம்தெரியாத தற்கொலை குண்டுதாரிகளினால் இலக்குவைக்கபட்டது. முதலில் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்ட இவர்கள் பின்னர் தங்களை வெடிக்கவைத்தனர். அவ்வேளை விமானநிலையத்திற்குள் சிக்குண்டிருந்த பிரிட்டனின் பத்திரிகையாளர் லோரனஸ் கமரூன் அந்த தருணங்கள் குறித்து தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.
விமானநிலையத்தில் தற்போது ஏதோ இடம்பெறுகின்றது, பாரிய பதட்டம் நிலவுகின்றது, மக்கள் குண்டுகுண்டு என சத்தமிடுகின்றனர், தாக்குதல் குறித்த வதந்திகள் காணப்படுகின்றன’’ என அவர் எழுதியுள்ளார்.
அதற்கு சிறிது நிமிடத்திற்கு பின்னர் அவர் பிபிசியின் வெப்தளத்தில் தாக்குதல் குறித்து தகவல் வெளியிட்டிருந்தார். அதற்கு சிறிது நேரத்திற்கு பின்னர் அவர் இவ்வாறு எழுதினார், “இங்கு நிலைமை மிகவும் பயங்கரமாகவுள்ளது” என தெரிவித்த அவர் தான் அங்கிருந்து தப்ப முயலும்படத்தையும் வெளியிட்டார்.

ஒரேயொரு வழியே இருந்தது
முதல் இரு குண்டுகளும் வெடித்தவேளை கார்டர் தனது பிரயாணபொதிகளை சேகரிக்கும் இடத்தில் காணப்பட்டுள்ளார். அவர் அந்த சத்தங்களை கேட்டுள்ளார் பின்னர் வெளியே மூன்றாவது சத்தத்தை கேட்டுள்ளார், தீப்பிழம்பை அவர் பார்த்துள்ளார், அங்கிருந்த பயணிகள் வெளியேற முயன்றதால் பாரிய பதட்டம் காணப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
தற்கொலை குண்டுதாரியொருவன் தன்னை வெடிக்கவைத்து இறந்த இடத்தினூடாகவே தப்பிசெல்ல முடியும் என்ற நிலை காணப்பட்டது என்கிறார் அவர்.
45 நிமிடங்கள் ஓளிந்திருந்த தேனிலவு தம்பதிகள்
ஈராக் பத்திரிகையாளர் ஸ்டீபன் நபில் துப்பாக்கிதாரியை தான் நேரிற்கு நேர் பார்த்ததாக குறிப்பிட்டார். அதன் பின்னர் தானும் தனது மனைவியும் மறைந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் இருவரும் தேனிலவிற்கு செல்வதற்காக விமானநிலையத்திற்கு வந்திருந்தவர்கள். குறிப்பிட்ட துப்பாக்கிதாரி இலகுவாக எங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளகூடிய நிலை காணப்பட்டது, அவன் அருகில் வந்தால் முகத்தில் வீசுவதற்காக சுடுநீரைகையில் வைத்திருந்தோம் என அவர் தெரிவித்தார். அச்சத்தில் உறைந்திருந்த தனது மனைவியை சமாதானப்படுத்துவது மிகவும் கடினமாக காணப்பட்டது என்றார் அவர். எனது வாழ்க்கையின் மிகநீண்ட 45 நிமிடங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் இறக்கலாம் என்ற மோசமான அச்சம்
துருக்கி விமானநிலையத்தின் ஓய்வெடுக்கும் அறையில் சிறிய உறக்கத்தில் இருந்தவேளை குண்டுசத்தத்தை கேட்டு கண்விழித்ததாக தெரிவிக்கின்றார் அமெரிக்காவை சேர்ந்த தோமஸ் கெம்பர்- சத்தத்தை கேட்டதும் மக்கள் உடனடியாக மூலைகளிற்குள்ளும், கழிப்பறைகள் போன்றவற்றிற்குள்ளும் பதுங்கதொடங்கினர் என அவர் தெரிவித்தார்.
ப்பாரிஸ் மற்றும் ஓர்லாண்டோவில் இடம்பெற்ற சம்பவங்கள் எனது மனதிற்குள் ஓடதொடங்கின, அவர்கள் அங்கு வந்து என்னை சுடுவார்கள் என நான் நினைத்தேன். அது மிகவும் அச்சம் மிகுந்த உணர்வு. கொல்லப்படுவேன் என நினைத்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனது மகளை என்னால் கண்டுபிடிக்கமுயலவில்லை
முதல்குண்டு வெடிப்பு இடம்பெற்றதை தொடர்ந்து ஓளிவதற்கான முயற்சியின் போது தனது 13 வயது மகள் ஆயிசா காணமற்போனதாக சமிரா முகமட் அப்டி தெரிவித்தார்.
நாங்கள் குண்டுவெடிப்பை கண்ணால் கண்டேன்,அது எங்களிற்கு முன்னாள் இடம்பெற்றது. தீடிரென பாதுகாப்பு பிரிவினர் மேலேயும் கீழேயும் ஓடத்தொடங்கினர், நாங்கள் அனைவரும் ஓரு சிறிய இடத்திற்குள் ஓழிந்திருந்தோம்- 20 பேர் இருந்தோம் என அவர் தெரிவித்தார்.
துப்பாக்கி சத்தம் கேட்டதும் நாங்கள் கதவை மூடினோம், அதன் பின்னரே எங்கள் மகளை காணவில்லை என்பதை உணர்ந்தோம் அது எனது வாழ்வின் மிகவும் துயரமான தருணம் என அவர் குறிப்பிட்டார். என்னால் மகளை கண்டுபிடிக்கமுடியவில்லை. அதன் பின்னர் சிறுமியின் உறவினர் ஓருவர் அவளை தேடிச்சென்றுள்ளார்.
துப்பாக்கிபிரயோகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது அனைவரும் தரையில் வீழ்ந்துகிடந்தனர். ஆனால் அவர் எனது மகளை தேடிச்சென்றார், ஆயிசா. ஆயிசா என அழைத்தார், என அவர் தெரிவித்தார்.
எனினும் 20 நிமிடங்களிற்கு பின்னர் ஆயிசாவின் தொலைபேசி அழைக்கதொடங்கியது. ஆயிசா இன்னொரு இடத்தில் மறைந்திருந்தார். ஆங்கிலம் பேசக்கூடிய ஓருவரை கண்டுபிடித்து அவரின் கைபேசியுடன் தனது குடும்பத்தவர்களை ஆயிசா தனது தந்தையை தொடர்புகொண்டார்.





