செய்திகள்

துமிந்தவின் சாரதி சுட்டுக் கொலை

அத்துருகிரிய பகுதியில் சலூன் கடையொன்றுக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 33 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவின் வாகன சாரதியாக இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர் இரண்டு கொலைகள் மற்றும் மற்றுமொரு கொலை முயற்சி சம்பவங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியிருந்தவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அத்துறுகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -(3)