செய்திகள்

துமிந்த , மேர்வின் , சஜின்வாசுக்கு வேட்பு மனு இல்லை : மைத்திரி – மஹிந்த தரப்பு இணங்கியது?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த சில்வா , மேர்வின் சில்வா மற்றும் சஜின்வாஸ் குணவர்தன ஆகியோருக்கு வேட்பு மனு வழங்கப்படாது என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் முன்வைத்த நிபந்தனைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் இணங்க தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்ககின்றன.

இந்த விடயம் தொடர்பாக இரண்டு தரப்பினருக்குமிடையே கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இரண்டு தரப்பினரும் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன்  சுசில் பிரேமஜயந்த , அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் டிலான் பெரேரா ஆகியோரின் பெயர்கள் தேசிய பட்டியலுக்காக பிரேரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.