செய்திகள்

துறைசார் கண்காணிப்புக் குழுக்களை அமைப்பதில் தாமதம்!

எதிர்க்கட்சிகள் தமது உறுப்பினர்களை நியமிக்காத காரணத்தினால் துறைசார் கண்காணிப்புக் குழுக்களை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

துறை ரீதியான கண்காணிப்பு குழுக்களுக்கான உறுப்பினர் பட்டியலை ஆளும் கட்சி அனுப்பி வைத்துள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

17 துறைசார் கண்காணிப்புக் குழுக்களை அமைப்பதற்கு பாராளுமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்தது.

புதிய குழுக்களின் தலைவர் பதவிகள் தமது உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு ஆளும் தரப்பு இணக்கம் தெரிவிக்கவில்லை.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் முரண்பட்ட கருத்துக்கள் காரணமாக குழுக்கள் அமைப்பதில் மேலும் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.

இதேவேளை, துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான இளைஞர் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான அழைப்பின் போது 600இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

-(3)