செய்திகள்

தெமட்டகொட துப்பாக்கிதாரிகளை கண்டு பிடிக்க இரத்தக்றைகளை பின்தொடரும் பொலிஸார்

கொழும்பு தெமட்டக்கொட பகுதியில் நேற்று சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி பிரியோகம் மேற்கோண்டவர்களை கைது செய்வதற்காக வீதியில் காணப்படும் இரத்தக்கறையை பொலிஸார் பின் தொடர்ந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரொன்றிலும் மற்றும் மோட்டார் சைக்கிளொன்றிலும் வந்த குழுவினரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் அதன்போது சிறைச்சாலை பொலிஸாரும் பதில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும்  இவ்வேளையில் இவ்வேளையில் துப்பாக்கி தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி காயமடைந்த நபரின் காயத்திலிருந்து இரத்தம் வீதியில் சொட்டுச் சொட்டாக விழுந்துள்ளதாகவும் இந்த இரத்தக்கறை நீண்ட தூரத்திற்கு இருப்பதாகவும் இதனை பின் தொடர்ந்து பொலிஸார் சந்தேக நபர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
n10