தேசிய அரசாங்கத்தை அமைக்க யோசனை!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 25ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதிய வசதி தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து அவர் இந்த அழைப்பை விடுக்க உள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அன்றைய தினம் அழைப்பு விடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறு கட்சிகளின் பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்தித்த போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி முதலில் அனைவரையும் அழைக்க வேண்டும் என சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் கட்சி என்ற ரீதியில் தீர்மானம் எடுக்க முடியாத பட்சத்தில் தனி நபராக குழுவாக இணைந்து தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-(3)




