செய்திகள்

தேசிய அரசாங்கம் அமைகிறது: விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு!

அடுத்த வாரத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது பொதுஜன பெரமுனவை சேர்ந்த பலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் பணிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், தேசிய அரசாங்கம் என்ற பெயரில் சில கட்சிகளை இணைத்துக்கொண்டு பயணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி 30 அமைச்சுப் பதவிகள் 40 இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது கட்சியில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டிய பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டாம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதியுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தாமல் கட்சியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அக்கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

-(3)