செய்திகள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவையில் தீர்மானம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மூலம் தேசிய நாளேடுகளில் விளம்பரங்களை பிரசுரித்து வெளியிடப்பட்ட பயணிகள் சேவை அனுமதிப்பத்திரம் இல்லாது இடைப்பட்ட பிரதேச பாதைகளில் பேரூந்துகளைத் தொழிற்படுத்துபவர்களுக்கு எதிராக 1991 ஆம் ஆண்டு 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழச் சட்டத்தின் 40 (உ) பிரிவின் பிரகாரம் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படினும் தவறு இழைப்பவர்கள் அத்தவறுகளை மீண்டும் புரிவதற்கு தூண்டப்படுவது சட்டத்தின் 40 (உ) பிரிவில் காட்டப்பட்டுள்ள குற்றங்கள் போதுமானதாக இல்லாமையேயாகும்.
எனவே குறித்த சட்டத்தை திருத்தியமைத்து இதுவரை தண்டப்பணமாக அறவிடப்பட்ட 10,000 ரூபா தொகையை 200,000 வரை அதிகரிப்பதற்கு   போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைபத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
n10