செய்திகள்

தேசிய மதமாக பௌத்தம் பிரகடப்படுத்தப்படாது : கருணாரட்ன பரணவிதாரன

பௌத்த்திற்கு நாட்டில் முன்னுரிமை கொடுக்கப்படுமே ஒழிய பௌத்த இராச்சியமாக இலங்கை ஒருபோதும் பிரகடனப்படுத்தப்படாது என ஊடகத்துறை பதில் அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பதிலமைச்சர் கருணாரத்ன பரணவிதான செய்தியாளர் ஒருவர் புதிய அரசியல் யாப்பில் இலங்கையை பௌத்த இராச்சியமாக பிரகடனம் செய்யும் திட்டம் உண்டா என்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட மதத்தலைவர்கள் பௌத்தத்திற்கு அரசியல் யாப்பில் முக்கிய இடம் வழங்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் யாப்பு தொடர்பாக தெரிவித்திருந்தார். அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிலர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அப்படியொன்றுமில்லை. அரசியல் யாப்பு வரைவு இன்னும் இடம்பெறவில்லை. என அவர் தெரிவித்துள்ளார். -(3)