தேயிலை , இறப்பர் விலை வீழ்ச்சியால் நிலுவை சம்பளத்தை வழங்க முடியாது : தொழில் அமைச்சர்
தேயிலை இறப்பர் விலைகள் உலக சந்தையில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க முடியாது என தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
நேற்று கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது 730 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றதே பெரிய விடயம் தற்போது உலக சந்தையில் தேயிலை , இறப்பர் விலை வீழ்ச்சியடைந்துள்ளன இந்நிலையில் தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். -(3)




