செய்திகள்
”தேர்தலில் போட்டியிட தயார் இல்லை என்றால் யானை – மொட்டு விலகிக்கொள்ளலாம்”
“உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தீர்மானமிக்கது. வடக்கு – கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் சிறந்த தரப்பினரை தேர்தலில் களமிறக்குவோம் என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மறைமுகமாக அழுத்தம் பிரயோகிப்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம், தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும். தேர்தலில் போட்டியிட தயார் இல்லை என்றால் யானை, தாமரை மொட்டு தாராளமாக விலகிக்கொள்ளலாம். அது நாட்டு மக்களின் பிரச்சினையல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
-(3)




