செய்திகள்
தேர்தலுக்காக க.பொ.த உ.த பரீட்சை கால அட்டவணையில் மாற்றம்
ஆகஸ்ட் 17ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளமையினால் அந்த காலப் பகுதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்தாதிருப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
திட்டமிட்டப்படி எதிர்வரும் ஆகஸ்ட் 4ம் திகதி முதல் குறித்த பரீட்சை ஆரம்பமாகவுள்ளபோதும் 15 ம் திகதி முதல் 20ம் திகதி வரையான காலப்பகுதியில் பரீட்சையை நடத்தாது அந்த தினங்களுக்குறிய பரீட்சையை வேறு தினங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன்படி கால அட்டவணையை மாற்றியமைக்கும் பணிகளை பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாற்றப்பட்ட அட்டவணைகள் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.




