செய்திகள்

தேர்தல் பிரசாரத்துக்கு அரச வாகனங்கள் வேண்டாம் : தேர்தல் ஆணையாளருக்கு பெப்ரல் கடிதம்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது அரச வாகனங்களையும் சொத்துக்களையும் பயன்படுத்துவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி  தெரிவித்துள்ளார்.

19 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தேர்தல்கள் ஆணையாளருக்குள்ள அதிகாரத்தினை முன்னிலைப்படுத்தி இந்த கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள வாகனங்களை தேர்தல் கடமைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெப்ரல் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை மீள பெற வேண்டும் எனவும் அந்த கோரிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.