செய்திகள்

தேவைப் பட்டால் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த சட்டம் வரும் : பிரதமர்

நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த புதிய சட்டங்கள் தேவை எனில் அவற்றை புதிதாக கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெலிமடையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
”நாட்டின் வானொலி, தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை கட்டுப்படுத்த சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் இணையத்தளங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் இல்லை. சமுக வலைதளங்களின் ஊடாக எவ்வாறான செய்திகளையும் வெளியிட முடியும். எவ்வாறான தகாத வார்த்தைகளையும் பிரயோகிக்க முடியும். இதனால் சமுகத்துக்கும் தனி நபர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுமாக இருந்தால், அதனை கட்டுப்படுத்துவற்கான சட்டத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்”. -(3)