செய்திகள்

தொடரும் இராணுவப் பிரசன்னத்துக்கு எதிராக வடக்கு கிழக்கில் 15ஆம் திகதி ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு!

முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டு பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பூரண கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த இந்த கடையடைப்பு போராட்டத்தை நடத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில், தமிழர் தாயகத்தில் இன்று வரைத் தொடரும் இராணுவத்தின் மிருகத்தனத்தை எதிர்த்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் இந்த கடையடைப்பு போராட்டத்தை நடத்த தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கடிதம் மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்காவுக்கும் அறிவித்துள்ளனர்.