தொடரும் எயார்பார்க் மக்களின் போராட்டம் : ஆதரவாக இளைஞர்களின் வருகை ஆரம்பம்
தோட்ட காணிகள் தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹுன்னஸ்கிரிய நகரில் எயார்பார்க் தோட்ட தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்கிறது.
நேற்று காலை போராட்டத்தை ஆரம்பித்த அவர்கள் நேற்று இரவும் தொடர்ந்தும் அவ்விடத்திலேயே தங்கியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு அந்தப் பகுதியில் திட்டமிட்டு மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் அங்குள்ள இளைஞர்களின் முயற்சியால் அந்த பகுதிக்கு ஜெனரேட்டர்கள் மூலம் ஒளி கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உணவு , நீர் உள்ளிட்ட உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்போது அந்த தொழிலாளர்களின் போராட்டத்திற்கு உதவியாக வெளியிடங்களிலிருந்தும் இளைஞர்கள் வந்து குவிந்தவன்னம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)





