தொடரும் சீறற்ற காலநிலை தொற்றுநோய்கள் அதிகரிப்பு
மழை க்கலாம் தொடர்வதால் காய்ச்சல், டெங்கு, வயிற்றுப்போக்கு மற்றும் எலிக்காய்ச்சல் என தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.வயிற்றுப்போக்கு நோய்கள் வராமல் இருக்க உணவு உண்ணும் போது கவனமாக இருக்குமாறும் அத்துடன் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதாக சுகாதாரத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
விவசாயிகளுக்கு எலிக்காய்ச்சல் இருப்பதாக சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள சுகாதார மருத்துவ அலுவலகம் அல்லது பொது சுகாதார ஆய்வாளரை தொடர்பு கொள்ளுமாறும் விவசாயிகளுக்கு எலிக்காய்ச்சல் இருப்பதாக சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள சுகாதார மருத்துவ அலுவலகம் அல்லது பொது சுகாதார ஆய்வாளரை தொடர்பு கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.இதன் மூலம் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,207 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் 16,844 கொரோனா இறப்புகளும் பதிவாகியுள்ளன.அத்துடன் இன்புளுவன்சா நிலைமையை கட்டுப்படுத்த வீட்டில் இருந்தாலும் முக்கவசம் அணிவது மிகவும் அவசியம் என சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.{15}




