செய்திகள்

தொடரும் வரட்சி : நீரை சிக்கனமாக பயன்படுத்தவும்

தற்போது நாட்டில் நிலுவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தென், சப்ரகமுவ மத்திய மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிவரும் வரட்சியான காலநிலை நீர் பாவனைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சில பிரதேசங்களுக்கு 24 மணி நேரமும் நீரை விநியோகிக்க முடியாதுள்ளதால் அந்த பிரதேசங்களுக்கு பௌசர்கள் மூலம் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அந்த சபை தெரிவித்துள்ளது.