செய்திகள்

”தொழிலாளர் வர்க்க மாவீரர்களை தேயிலை தினத்தில் நினைவுகூறுவோம்” : நாளை கொழும்பில் ஒன்று கூடும் இளைஞர்கள்

இன்றைய தினம் சர்வதேச தேயிலை தினமாகும் இதனையொட்டி நாளை கொழும்பில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை 16ஆம் திகதி முற்பகல் 11.30 மணிக்கு கொழும்பு ஜந்துலாம்பு சந்தியில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
டிசம்பர் 15ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தில் போற்ற படவேண்டியவர்கள் தேனீர் சுவைக்காக வாழ்க்கையின் பல சுவைகளை அறியாத பெருந்தோட்ட தொழிலாளர் வர்க்கமே. எனவே அவர்களை கௌரவிக்கும் முகமாகவும், இதுவரை காலமும் அவர்களுக்காக உயிர்நீத்த தோட்ட தொழிலாளர் வர்க்க மாவீரர்களை நினைவு கூறவும், 16.12.2016 திகதி காலை 11.30 மணிக்கு கொழும்பு ஜந்துலாம்பு சந்திக்கு அனைவரையும் வருமாறு ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது. -(3)