செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்குள் அரசியல்வாதிகள் நுழைவு : விரட்டியடிப்போம் என்கிறார்கள் மக்கள்

மலையக தோட்டத் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக முன்னெடுத்து வரும் போராட்டம் திவிரமடைந்து வரும் நிலையில் மலையக அரசியல்வாதிகள் இந்த சந்தர்ப்பத்தில் தமது அரசியல் செயற்பாடுகளை அதற்குள் புகுத்தி அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களும் மற்றும் அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கும் பிரிவும் நேற்று முதல் தமது அரசியல் செயற்பாடுகளை அந்த போராட்டங்களுக்குள் திணித்துள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமக்காக இத்தனை காலம் போராட திறணற்று இருந்த இந்த அரசியல்வாதிகள் தோட்டத் தொழிலாளர்கள் சுயாமாக போராடி வெற்றியை நெருங்கிக்கொண்டிருக்கையில் அந்த அரசியல்வாதிகள் தாங்களே போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டதாக காட்ட முயற்சிப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது மக்களை ஏமாற்றிய தொழிற்சங்கங்களோ மக்களின் போராட்டத்திற்குள் நுழைந்து குழப்ப முயற்சித்தால் அவர்களை விரட்டியடிப்போம் என போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். -(3)