தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 730 ரூபா?
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 620 ரூபாவிலிருந்து 730 ரூபா வரை அதிகரிப்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதன்படி கூட்டு ஒப்பந்தம் விரையில் கைச்சாத்திடப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இதற்கு இ.தொ.க இதுவரை இணக்கம் வெளியிடவில்லை. இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் இது தொடர்பாக இன்று தனது அறிவிப்பை வெளியிடவுள்ளது.
இதேவேளை தோட்டத் தொழிலாளர்கள் 1000ரூபா சம்பள அதிகரிப்பை கோரி தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்திவரும் நிலையில் அவர்களின் போராட்டத்தை நிறுத்துவது தொடர்பாக நேற்று பிற்பகல் தொழில் அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தே அமைச்சர் பாராளுமன்றத்தில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)




