தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்தால் பஸ் நிறுத்த போராட்டம் நடக்குமாம்
மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களின் வீதி ஆர்ப்பாட்டங்கள் தொடருமாகவிருந்தால் தாம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மலையகத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறாக தனியார் மற்றும் இ.போ.ச பஸ் சங்கங்களே தெரிவித்துள்ளன.
மக்கள் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் தாம் பெரும் சிரமங்களையும் மற்றும் நஷ்டத்தையும் எதிர்நோக்குவதாகவும் இதன்படி இன்றும் அவர்களின் போராட்டம் தொடருமாகவிருந்தால் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொள்வோம் என அவர்கள் தெரிவித்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. -(3)




