தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு சாத்தியமற்றது : என்கிறார் ராஜித
இறப்பர் , தேயிலை விலைகள் உலக சந்தையில் வீழ்ச்சிக் கண்டுள்ளன. இவ்வாறான நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தை அவர்களுக்கு வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்தை எதிர்பார்க்கின்றார்கள் , இறப்பர் மற்றும் தேயிலை விலைகள் சந்தையில் வீழ்ச்சியடைந்திருக்கையில் அதனை பெற முடியாது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)




