செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மலையக இளைஞர்கள் நாளை கொழும்பில் போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பில் தொழில் புரியும் மலைய இளைஞர்கள், மலையக மக்களின் மீது அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலையக போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து எமது தோட்டத் தொழிலாளர் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்குமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
புறக்கோட்டை ஐந்து லாம்பு சந்தியில் காலை 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது. இதில் கலந்துக்கொள்ளுமாறு கொழும்பிலுள்ள மலையக இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. -(3)