தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்
தமது உரிமைகளுக்காக தோட்டத் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் மலையக சமுகத்தினாரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானவர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
புறக்கோட்டை ஐந்துலாம்பு சந்தியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் செட்டியார் தெரு , பிரதான வீதி மற்றும் டேம் வீதி உள்ளிட்ட புறக்கோட்டையில் பல்வேறு இடங்களில் தொழில் புரியும் மலையக இளைஞர்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தனர்.
இவர்கள் அங்கிருந்து செட்டியார் தெருவில் அமைந்துள்ள ஆலயத்திற்கு சென்று தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்வதற்காக புறப்பட்ட நிலையில் அதற்கு அங்கிருந்த பொலிஸார் எதிர்ப்பு தெரிவித்து வழி மறித்துள்ளனர். ஆனாலும் பொலிஸாருக்கு தமது போராடும் உரிமையை தடுக்க முடியாது என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டோர் செட்டியார் தெருவிலுள்ள கோயிலுக்கு முன்னால் சென்று தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தனர்.
-(3)




