செய்திகள்
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்
1000 ரூபா சம்பள அதிகரிப்பு கோரி மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பல்கலைக்கழகத்தின் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துள்ளனர்.
-(3)




