செய்திகள்

தோட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது – தொடர்கிறது தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக பணி செய்யும் போராட்டம்

மலையகத்தில் தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக பணி செய்யும் போராட்டத்தில் ஈடுப்படுவதனால் இலங்கையில் உள்ள 23 கம்பனிகளை சேர்ந்த தோட்ட உத்தியோகஸ்தர்கள் மற்றும் தோட்ட அதிகாரிகள் ஆகியோர் இன்றைய தினம் வேலைக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது. தேயிலை தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இவ்வாறு குறைவான நிலையில் கொழுந்து பறிப்பதனால் கம்பனிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனாலேயே இவ்வாறு தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம் எடுத்ததாக தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து தங்களுக்கு மலையக தொழிற்சங்கங்கள் இவ்வாறு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் தங்களின் பாதுகாப்புக்காக தோட்ட நிர்வாகத்திலிருந்து விலகி கொள்ளப்போவதாகவும் மேற்படி தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு தோட்டத்தில் உள்ள வெளிகல உத்தியோகஸ்தர்கள் மற்றும் காரியாலய உத்தியோகஸ்தர்களையும் தொழில் ஈடுப்பட வேண்டாம் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. இவர்களின் வேண்டுக்கோள்க்கிணங்க நேற்றைய சகல தோட்டங்களிலும் உள்ள உத்தியோகஸ்தர்கள் மாலை முதல் தொழிலுக்கு செல்லவில்லை. தோட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதோடு தொழிலாளர்களால் பறிக்கப்பட்ட கொழுந்தும் அத்தோட்டங்களில் உள்ள கொழுந்து மடுவங்கள் மற்றும் தொழிற்சாலைக்கு முன்பாக கொட்டப்பட்டுள்ளது. அத்தோடு கொழுந்துகளை தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல கூட வாகனங்களை தோட்ட நிர்வாகம் வழங்க மறுத்துள்ளது.

இவ்வாறு தற்காலிகமாக தொழிற்சாலைகள் மூடுவது தொடர்பாக பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனம்  நேற்று  அறிவித்திருந்தமை  குறிப்பிடதக்கது.

அத்தோடு மூன்றாவது நாளான இன்று தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக பணி செய்யும் போராட்ட நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்தனர்.

நேற்று  தோட்ட தொழிலாளர்கள் 5 கிலோ, 2 கிலோ மாத்திரமே கொழுந்து பறித்திருக்கின்றார்கள் என தெரியவந்துள்ளது.

DSC00535 DSC00513 DSC00514