செய்திகள்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகார கூட்டு ஒப்பந்தம் இந்த வாரத்தில் கைச்சாத்தாகும்?

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம்  தொடர்பான கூட்டு ஒப்பந்தம் இந்த வாரத்திற்குள் கைச்சாத்திடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாளிமார் சம்மேளனம் இது தொடர்பாக சாதகமான சமிக்ஞையை காட்டியுள்ளதாகவும் கூட்டு ஒப்பந்தம் இந்த வாரத்திற்குள் கைச்சாத்திடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாகவும் முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதன்படி நியாயமான சம்பள அதிகரிப்பை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க முடியுமாகவிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். –(3)