செய்திகள்
நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதி
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் கமலஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை மாடிப்படியில் இருந்து இறங்கி வரும் போது கால் தடுமாறி கீழே விழுந்ததில், அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
N5




