நடிகர் கமலுக்கு திரையுலகம் ஆதரவு – நடிகர் விஷால்
தமிழ் படங்களுக்கான மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டன. 8 ஆண்டுகளுக்கு பிறகு விருதுகள் ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டதால் திரையுலகினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.தயாரிப்பாளர் சங்க தலைவரும்,
நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் , இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுரேஷ் ஆகியோர்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால் இவ்விருது திரைத்துறையினருக்கு மிகுந்த ஊக்க்மாக இருக்கும் என்றார். மேலும் நடிகர் கமல் ஒரு விஷயத்தில் இறங்கினால் அது பற்றி முழுமையாக தெரிந்தே இறங்குவார். கமலுக்கு ஒரு பிரச்னை என்றால் ஒட்டுமொத்த திரையுலகமே அவர் பின்னால் நிற்கும் என்று விஷால் கூறினார்.(15)




