செய்திகள்

நடிகர் விஜய் நடித்துள்ள ‘பைரவா’ படத்துக்கு வரிச்சலுகை வழங்க மறுப்பு

புதுச்சேரி மாநில அரசு தமிழில் தலைப்பு இல்லை என்று கூறி வரிச்சலுகை வழங்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து புதுச்சேரி மாநிலத்தில் ‘பைரவா’ படத்தை வெளியிட உரிமம் பெற்ற வினியோகஸ்தர் ஜி.ஆர்.துரைராஜ், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு மனுவில், ‘பைரவா’ என்பது இறைவன் சிவபெருமானின் மறு அவதாரப் பெயர் ஆகும். ‘பைரவா’ என்பது தமிழ் வார்த்தை தான் என்று கூறி தமிழக அரசு வரிச்சலுகை வழங்கி இருக்கும்போது, புதுச்சேரி அரசு வரிச்சலுகை வழங்க மறுப்பது தன்னிச்சையான செயலாகும். எனவே, வரிச்சலுகை வழங்க மறுத்து, புதுச்சேரி அரசு கடந்த பிப்ரவரி மாதம் 8–ந் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கே.கல்யாணசுந்தரம் விசாரித்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி புதுச்சேரி மாநில உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை ஆணையருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

N5