செய்திகள்
நடிகையுடன் நெருக்கம் – கேள்வியை தவிர்த்த ஜெயம்ரவி!
ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன். அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலர் மூலம் ஜெயம் ரவியும் ஹன்சிகாவும் இப்படத்தில் நெருக்கமாக நடித்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அண்மையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெயம் ரவியிடம் கேட்கப்பட்டது. ஆனால் இந்த கேள்வியால் கோபமான ரவி, இதை தவிர்த்து வேறு ஏதாவது கேளுங்கள் என சொன்னாராம். மேலும் நான் இப்போது வளர்ந்துவிட்ட நடிகர் எனவும் அவர் கூறியுள்ளார்




