செய்திகள்
நடிகை தமிதா அபேரத்ன பிணையில் விடுவிப்பு!
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல நடிகை தமிதா அபேரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் அவரை விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (12) உத்தரவிட்டார்.
ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிதா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
-(3)




