செய்திகள்

நடிகை நமீதாவுக்கு 24-ந்தேதி திருமணம் தனது காதலரை மணக்கிறார்

குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நமீதாவுக்கு தற்போது வயது 36. தெலுங்கில் அறிமுகமான நமிதா, தமிழில் விஜயகாந்த் ஜோடியாக எங்கள் அண்ணா படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சரத்குமாருடன் ஏய் படத்தில் நடித்து பிரபலம் ஆனார். பின்னர் சத்தியராஜுடன் இங்கிலிஷ்காரன், விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், அஜித்துடன் பில்லா உள்பட ஏராளமான படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்தார். பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார். தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார்.
சமீபத்தில் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றதால் அவரின் ரசிகர்கள் பட்டாளம் இன்னும் கூடியது. இந்நிலையில் தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாக நமீதா தெரிவித்துள்ளார். பிக்பாஸில் மற்றொரு போட்டியாளராக பங்கேற்ற ரைசா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நமீதா, ரைசா தனது நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். மேலும் நமீதா தனது வருங்கால கணவரான வீராவை அறிமுகம் செய்து வைத்ததோடு, நவம்பர் 24-ஆம் தேதி தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். உங்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு என்றும் தேவை என்றும் நமீதா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.(15)Actress-Namitha