நதியாவை வில்லியாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்!
பூவே பூச்சூடவா படத்தில் தமிழுக்கு வந்த நதியா, அதன்பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். சுமார் பத்து வருடங்களாக நடித்து வந்த அவர், பிரபுவுடன் நடித்த ராஜகுமாரன் படத்திற்கு பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். பத்து வருடங்க ளுக்குப் பிறகு மறுபிரவேசம் செய்த அவர், ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் அம்மா வேடத்தில் நடித்தார். தொடர்ந்து தாமிரபரணி, சண்ட, பட்டாளம் என அம்மா வேடங்களில் நடித்தார். அப்படி நடித்த எல்லா படங்களிலுமே கதைக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில் நடித்த நதியா, பின்னர் சரியான படங்கள் கிடைக்காததால் தமிழில் நடிக்கவில்லை. ஆனால், தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அந்த வகையில், திருஷ்யம் தெலுங்கு ரீமேக்கில் பெண் ஐஜி வேடத்தில் நடித்த நதியா, புருஸ்லீ, அ ஆ படங்களைத் தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மகேஷ்பாபுவின் வாஸ்கோடகாமா படத்திலும் நடிக்கிறார். இந்த படத் தில் வில்லன் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடிக்கும் நதியாவும் நெக டீவ் ரோலில்தான் நடிக்கிறாராம். எஸ்.ஜே.சூர்யா அளவுக்கு அவரும் மகேஷ்பாபு வுடன் மோதும் காட்சிகளிலும் நடிக்கிறாராம். தெலுங்கு சினிமாவில் நதியாவின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அவருக்கு இந்த முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தை கொடுத்துள்ளாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.
N5




