செய்திகள்

நந்திக்கடலில் நடந்த படகுப் போட்டி!

சித்திரை புதுவருடப் பிறப்பை முன்னிட்டு முல்லைத்தீவு கண்ணகி மாட்டுவண்டில் சவாரி சங்கத்தினர் நந்திக்கடலில் படகுப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர்.

நந்திக்கடலில் நடைபெற்ற படகுப் போட்டியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.சிவமோகன் ஆரம்பித்து வைத்தார்.

பந்தய தூரம் ஒரு கிலோ மீற்றர் நிர்ணயிக்கப்பட்டதுடன் நன்னீர் மீன்பிடி சங்கங்களை சேர்ந்த 10 படகுப் போட்டியாளர்கள் பங்குபற்றினர்.

முத்தையன் கட்டு நன்னீர் மீன்பிடி சங்கம் முதலிரண்டு இடங்களையும் வற்றாப்பளை மீன்பிடி சங்கம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

-(3)