நமலுக்கு அரசியலை விட நடனத்திலேயே சிறந்த எதிர்க்காலம் உண்டாம்
நாமல் ராஜபக்ஷவுக்கு சிறந்த ”பிரேக் டான்சராக” வருவதற்கான தகுதிகள் இருப்பதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷவுக்கு அரசியலை விட நடனம் நன்றாக தெரியும். அவருக்கு சிறந்த பிரேக் டான்சராக வருவதற்கான தகுதிகள் உண்டு அந்த வழியில் அவருக்கு போகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியிலிருந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நடத்தப்பட்ட பாதயாத்திரையின் போது நாமல் ராஜபக்ஷ சில இடங்களில் நடனமாடியவாறு பயணித்தமை சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்கதக்கது.




