நம்பிக்கை இழக்காமலிருக்க முயலும் காணமற்போனவர்களின் உறவுகள்
த எகனமிஸ்ட்
ஏழு வருடங்களிற்கு முன்னர் கொழும்பின் மும்முரமான வீதிகளில் இனந்தெரியாத ஆயுதாரிகள் ஸ்டீபன் சுந்தரராஜினை கடத்திச்சென்றனர். தனது மூன்று குழந்தைகளுடன் சென்றுகொண்டிருக்கையிலேயே அவர் கடத்தப்பட்டார்.
கடத்தப்பட்டவேளை அவர் உள்ளுர் மனித உரிமை அமைப்பொன்றின் திட்டமுகாமையாளராக கடமையாற்றிக்கொண்டிருந்தார். ஓரு சில வாரங்கள் பொலிஸில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் மிகமோசமான பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்- இந்த சட்டம் கண்மூடித்தனமாக கைதுசெய்தல் மற்றும் தடுத்துவைத்தலைஅனுமதிக்கின்றது.
அவர் இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல்செய்திருந்தார்.
எனினும் விடுதலைசெய்யப்பட்ட சில நிமிடங்களில் அவர் கடத்தப்பட்டார், காணமற்போனார்.
26 வருட உள்நாட்டு யுத்தம் 2009 இல் விடுதலைப்புலிகளின் தோல்வியுடன் முடிவடைந்த இலங்கையில் இவ்வாறான மனதை வருத்தும் கதைகள் சாதாரணமானவை.
கடந்தநூற்றாண்டில் நாடு தென் பகுதியில் மார்க்சிச கிளர்ச்சியை சந்தித்திருந்தது. மேலும் தமிழ் மக்களிற்கு எதிரான பல இனக்கலவரங்களை எதிர்கொண்டிருந்தது. இந்த வருட மே மாதத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பலர் பலவந்தமாக காணமற்போகச்செய்யப்பட் ட நாடு இலங்கை என்பதை ஏற்றுக்கொண்டார்.படையினர், விடுதலைப்புலிகள் மற்றும் ஏனைய கிளர்ச்சிக்காரர்கள் உட்பட அனைவரும் இந்த விடயத்தில் குற்றவாளிகள்.
எனினும் பலவந்தமாக காணமற்போகச்செய்யப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கைகள் குழப்பமானவையாக காணப்படுகின்றன. ஓவ்வொரு தரப்பிற்கும் ஏற்ப அது வேறுபடுகின்றது. ஐக்கியநாடுகள் ஈராக்கிற்கு பின்னர் இலங்கையிலேயே அதிகளவானவர்கள் காணமற்போயுள்ளனர் என தெரிவிக்கின்றது. 5731 பேர் குறித்த விசாரணைகள் இடம்பெறவேண்டும் என ஐக்கியநாடுகள் தெரிவிக்கின்றது. எனினும் இலங்கையின் தென்பகுதியில் இடம்பெற்ற கிளர்ச்சி குறித்து ஆராய்ந்த டேர்காம் பல்கலைகழகத்தை சேர்ந்த டயனா ஹியுஸ் இரண்டாவது கிளர்ச்சியில் மாத்திரம் ஆயிரக்கணக்கானவர்கள் காணமற்போயிருக்கலாம் என்கிறார்.
விடுதலைப்புலிகளை தோற்கடித்த ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் ஏதேச்சதிகார ஆட்சியின்போது சுந்தரராஜன் போன்று கடத்தப்படுவது என்பது சாதாரணவிடயமாக காணப்பட்டது. அது வெள்ளை வான் என அழைக்கப்பட்டது. பயங்கரவாத சந்தேகநபர்கள மாத்திரமல்ல அரசியல் எதிராளிகளும் இலக்குவைக்கப்பட்டனர். சுந்தரராஜ் போன்ற சிலர் எந்த காரணமும் இன்றி கடத்தப்பட்டனர்,யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் காணமற்போயினர்.
2013இல் கடும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக இது தொடர்பில் ஆராய்வதற்கு ராஜபக்ச குழுவொன்றை நியமித்தார். பரணகம ஆணைக்குழுவிற்கு 198000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன, அதில் காணமற்போன இராணுவத்தினர் குறித்த 6000 ம் முறைப்பாடுகளும் உள்ளன,கண்ணீர் விட்டழுதபடி காணமற்போனவர்களின் புகைப்படங்களுடன் , அவர்களது உறவினர்கள்சாட்சியமளித்துள்ளனர். எனினும் கடந்த வருடம் வெளியிடப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை அரசாங்கத்தை யுத்தகுற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்திருந்தது. அந்த ஆணைக்குழுவிற்கு அதற்கான ஆணை வழங்கப்பட்டிருக்கவில்லை.
2015 இல் ராஜபக்ச அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டமை அதிகளவு நேர்மையான முயற்சிகளிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. புதிய அரசாங்கம் காணமற்போகச்செய்யப்படுதல் தொடர்பான ஐக்கியநாடுகள சாசனத்தை அங்கீகரித்ததுடன் அறிக்கையாளர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள அனுமதி வழங்கியது.முன்னைய சித்திரவதை கூடங்களிற்கு அவர்களை அழைத்துச்சென்றதுடன்,புதைகுழிகளை காண்பித்திருந்தது.எனினும் ஐக்கியநாடுகள் அறிக்கையாளர்கள் குழுவினர் தமது விஜயத்தின் இறுதியில் காணமற்போகச்செய்யப்பட்டமை விவகாரத்தில் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின்பிடியிலிருந்து தப்புவது இன்னமும் காணப்படுகின்றது என குறிப்பிட்டிருந்தனர். காணமற்போகச்செய்யப்பட்டவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் எனவும் அரசாங்கத்தை அது கேட்டுக்கொண்டிருந்தது.
அரசாங்கம் தான் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றது. காணமற்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டம் இந்தமாதம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும். காணாமற்போனவர்களின் குடும்பத்தவர்களிற்கு காணமற்போயுள்ளனர் என்றசான்றிதழை வழங்கும் திட்டமும் காணப்படுகின்றது. இவை காணமற்போனவர்களின் குடும்பத்தவர்கள் சட்ட, நிர்வாக மற்றும் பொருளாதாரநெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு உதவக்கூடும்.
எனினும் சுந்தரராஜாவின் மனைவி வதனா, தனக்கு சான்றிதழ்கள் எதுவும் தேவையில்லை என்கிறார். தனது கணவரை கடத்தி இருவரையும் தன்னால் அடையாளம் காண முடியும் என்கிறார் அவர்.தனது கணவர் தடுத்துவைக்கப்பட்டிருந்த பொலிஸ் சிறைக்கு வெளியே அவர்களை அடிக்கடி தான் பார்த்ததாக அவர் தெரிவிக்கின்றார்.எனக்கு எனது கணவரே வேண்டும் என தெரிவிக்கும் அவர் தனது கணவர் உயிருடன் உள்ளார் என்ற நம்பிக்கைiயும் கொண்டுள்ளார்.
காணமற்போனவர்களின் உறவினர்கள் இவ்வாறான நம்பிக்கையை கொண்டிருப்பது வழமை என்கின்றது இலங்கை செஞ்சிலுவை சங்கம்,அது கடந்த மாதம் வெளியிட்ட தனது ஆய்வில் பேட்டிக்காணப்பட்டவர்களில்; பெரும்பாலானவர்கள் தங்கள் உறவினர்கள் உயிருடன் உள்ளனர் என்ற நம்பிக்கையை வெளியிட்டனர்.
ஆள்கடத்தல் என்பதுவேண்டாம், சிங்களவர்கள் தமிழர்கள் எவரும் அதனை அனுபவிக்ககூடாது என தனது கண்ணீரை துடைத்தபடி தெரிவிக்கின்றார் வதனா- அவர் செய்திக்காக காத்திருக்கின்றார்.




