நரேந்திர மோடிக்கு எதிராக ”இராவணா பலய” போர்க்கொடி
இராவணன் ஒரு பயங்கரவாதி என்பதனைபோன்று குறிப்பிடும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு இலங்கையிலுள்ள இராவணா பலய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் சத்தாதிஸ்ஸ தேரர் தாம் நரோந்திர மோடியின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் இது தொடர்பாக இலங்கையிலுள்ள இந்திய உயரிஸ்தானிகராலயத்திற்கு சென்று மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மோடியின் இந்த கருத்து இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இதனால் அவரின் கருத்தை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் அந்த தேரர் தெரிவித்துள்ளார். -(3)




