நல்லாட்சி அரசாங்கம் ஊழல் மோசடிகாரர்களுடன் டீலை ஏற்படுத்தியுள்ளதா? : சந்தேகிக்கும் ராஜித
ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை பொறிமுறைகள் தொடர்பாக தனக்கு சந்தேகங்கள் உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அண்மையில் பொலிஸ் மா அதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்று தொடர்பாக ஊடகவியலாளர்களினால் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் சிலருடன் வேறு சிலர் டீலை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக சந்தேகிக்கின்றேன். இதனாலேயே இவ்வாறு நடக்கின்றது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)




