செய்திகள்

நல்லாட்சி  அரசாங்கம் மோசடியில் ஈடுபடுகின்றது : மஹிந்த

அரசாங்கம் கடன் எல்லையையும் கடனை வாங்கியுள்ளது. இதனைதான் மோசடி என கூறுவது ஆனால் எல்லாம் செய்துவிட்டு அரசாங்கம் தன்னையே குற்றஞ்சாட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
பண்டுவஸநுவர பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் கடன் எல்லையை விட மேலும் இரண்டு மடங்கு கடனை பெற்றுக்கொண்டுள்ளது. ஏன் இவ்வாறு கடன் பெற வேண்டும். இதனையே மோசடியென கூறுவது. எனது காலத்தில் வெளிநாட்டு கடன்களை பெற்று செய்ய வேண்டிய அபிவிருத்திகளை செய்தேன் ஆனால் இவர்கள் அளவுக்கு அதிகமாக கடனையும் பெற்று வற் வரியையும் அதிகரித்து மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. இப்படி கடனை பெற்றுவிட்டு சகல குற்றச்சாட்டுகளையும் என் மீதே சுமத்துகின்றனர். என அவர் தெரிவித்துள்ளார்.
n10