நல்லாட்சி அரசிலும் தொடரும் ஊடக அடக்குமுறை: வவுனியா ஊடகவியலாளர்கள் அதிருப்தி
நல்லாட்சி அரசிலும் ஊடகங்கள் மீது அடக்குமுறை தொடர்வதாக வவுனியா ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியா, குடியிருப்பு, கலாசார மண்டபத்தில் கடந்த 26 வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த இராணுவ முகாம் இன்று மாலை 3.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ரோஹண புஸ்பகுமாரவிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வுக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதுடன் செய்தி சேகரிக்க அனுமதி மறுத்திருந்தனர். இது தொடர்பாக வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா. உதயராசாவுடன் தொடர்பு கொண்டு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி பெற்றுத்தருமாறு கோரிய போதும் பிரதேச செயலாளரிடமம் ஊடகவியலாளருக்கு அனுமதி இல்லை என்ற பதிலே அனுப்ப்பட்டது.
குடியிருப்பு இராணுவ முகாமானது யுத்த காலங்களில் சோதனைச் சாவடியாக செயற்பட்டதுடன், பலர் இம் முகாம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும் இருந்தனர். இராணுவ முகாமைச்சூழ கோவில்கள், பாடசாலை, மக்கள் குடியிருப்பு, சிறுவர் பூங்கா மற்றும் வவுனியா பொது வைத்தியசாலை போன்றன அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
N5




