நல்லிணக்கப் பொறிமுறைகளின் செயற்பாடுகளுக்கு ஆலோசனை பெறுவதற்கான இணையத்தளம் அங்குராப்பணம்
இலங்கை வெளிவிகார அமைச்சின் எற்பாட்டில் இலங்கை மக்களின் நல்லிணக்கப் பொறிமுறைகளின் செயற்பாடுகளுக்கு ஆலோசனை பெறுவதற்கான இணையத்தளம் அங்குராப்பணம் செய்யும் நிகழ்வு இன்று யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹொட்டியாரட்சி ஆகியோர் தலைமையில் இணையத்தளம் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஏப்ரல் மாதம் வரை இவ்இணைத்தளம் ஊடாக மக்கள் ஆலோசனைகளை வழங்க முடியும். இதன் இறுதி அறிக்கைகள் எதிர்வரும் மே மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
WWW.SCRM.GOV.lk என்ற இணையத்தளம் ஊடாக மக்கள் பல பாகங்களில் இருந்தும் மூன்று மொழிகளிலும் இலங்கை நாட்டின் நல்லிணக்கப் பொறிமுறைகளின் செயற்பாடுகளுக்கு ஆலோசனைகளை வழங்க முடியும்.
n10




