செய்திகள்

நல்லிணக்க வேலைத்திட்டங்களுக்கு உதவ ஜேர்மன் தயார் : அஞ்சலா மேக்கல் உறுதியளிப்பு

இலங்கையில் நல்லிணக்க  வேலைத் திட்டங்களை முன்னெடுக்க தேவையான சகல ஒத்துழைப்புகளையும் ஜேர்மன் அரசாங்கம் வழங்குமென அந்நாட்டின் சான்சிலர் அஞ்சலா மேக்கல் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் நேற்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுடனான சந்திப்பின் பின்னர் நடத்தப்பட்ட இணைந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர் அங்கு வாழும் தமிழ்மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தின் சகல செயற்பாடுகளுக்கும் நாம் உதவிகளை வழங்குவோம். அதேபோன்று நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க தயாராகவுள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார்.