நல்லூர் கந்தன் தேர்த் திருவிழா – (நேரலை)
வரலாற்றுச் சிறப்பு மிக் யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த் திருவிழா இன்று நடைபெறுகின்றது.
ஆகஸ்ட் 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் மஹோற்சவம் ஆரம்பமாகியது.
இன்றைய தினம் சித்திர தேர்த் திருவிழா நடைபெற்று நாளை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் சித்திர தேரிலே பவனி வரும் கந்தனின் அருளை பெற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
இதேவேளை நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதை தவிர்த்து கொள்ளுமாறு வட மாகாணத்துக்கு பொறுப்பான மூத்த பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
-(3)




