செய்திகள்

நல்ல வேடங்களுக்காக காத்திருக்கிறேன் – ஓவியா

‘களவாணி’ படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்தவர் ஓவியா. கேரள வரவான இவர் சுந்தர்.சி. இயக்கிய ‘கலகலப்பு’ படத்தில் கவர்ச்சி நாயகி ஆனார். இதையடுத்து, ‘மதயானை கூட்டம்’, ‘புலிவால்’, ‘யாமிருக்க பயமேன்’, ‘சண்டமாருதம்’ , ‘144’, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படங்களில் நடித்தார்.
சிறிய இடைவெளிக்குப்பிறகு இப்போது, அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் நடிக்கிறார். இது குறித்து கூறிய ஓவியா, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இதுவரை நான் எதிர்பார்த்தபடி அழுத்தமான வேடங்கள் கிடைக்கவில்லை. இந்த படத்தில் நல்ல வேடம் அமையும் என்று நம்புகிறேன்.oviya9

நல்ல வேடங்கள் கிடைக்காததால் தான் சில தமிழ்படங்களை ஒத்துக்கொள்ளவில்லை. அழுத்தமான பாத்திரங்களுக்காக காத்து இருந்தேன். தமிழுக்கு இடைவெளி விட்டேன். இதற்கிடையே தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து இருக்கிறேன். ஒரு படம் மே மாதம் வெளியாகிறது.
இதுவரை 13 படங்கள் நடித்து இருக்கிறேன். என்றாலும், எனக்கு மன நிறைவு கொடுத்த படங்கள் இன்னும் அமையவில்லை. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை தொடர்ந்து மாறுபட்ட நல்ல வேடங்களில் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு படத்திலும் இனி கூடுதல் கவனம் செலுத்துவேன் என்றார்.201704181648415982_Oviya1-X._L_styvpf