செய்திகள்

நல்வழி பிறக்குமா என்பதே இழப்புக்களை சந்தித்த மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்

பா.ஜதுர்சிகா
கண்ணிமைக்கும் பொழுதுகள் கடல் அலையால் காவு கொள்ளப்பட்ட தேசங்களில் அழிவுகளின் அடையாளங்கள் பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுக்களாய் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் காணப்படுகின்றன.
அதாவது கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தமானது இலங்கையின் கரையோரப்பகுதிகள் எதனையும் விட்டுவைக்கவில்லை. இந்தேனிசியாவிலிருந்து ஆபிரிக்க கரைவரையும் இந்திய பெருங்கடலை ஒட்டியிருக்கும் பல கடலோர நாடுகளை உலுக்கிய சுனாமி உலகில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கைப்பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இந்த சுனாமியின் தாக்கத்தால் பதினான்கு நாடுகளைச் சேர்ந்த சுமார் இரண்டு இலட்சத்து எழுபத்தி ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் ஆண்களை விடபெண்களே அதிகம் இறந்தவர்களில் சுமார் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் பேர்இந்தேனிசியாவின் அச்சே மாகாணத்தைச் சேர்ந்தவர் இந்தோனேசியாவில் கடலுக்கடியில் ஏற்பட்ட இப்பூகம்பமானது இலங்கையின் கரையோரப்பகுதிகளை சின்னபின்னாமாக்கியது மட்டுமல்லாது ஐம்பதாயிரம் பேர் வரையில் இறந்துள்ளனர்.
அதாவது இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் 9051 பேருக்கும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நான்காயிரத்து 500 பேரும் காலி மாவட்டத்தில் மூவாயிரத்து 774 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாயிரத்து 975 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாயிரத்து 902 பேரும் யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 296 பேரும் மாத்தறை மாவட்டத்தில் ஆயிரத்து 61 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 984 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 170 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 65 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 32 பேரும் கம்பகா மாவட்டத்தில் ஓழு பேரும் உயிரிழந்தனர்.
இதனைவிட இந்தோனிசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, கிழக்காபிரிக்கா(சோமாலியா), மலேசியா, மியன்மார், பங்களாதேஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டதுடன் இலங்கை உட்பட குறித்த நாடுகள் உள்ளடங்கலாக சுமார் இரண்டு இலட்சத்து எழுபத்தி ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் கரையோரக்கிராமங்கள் குடியிருப்புக்கள் உட்;கட்டமைப்பு வசதிகள் என்பனவும் சின்னாபின்னமாக்கி சிதைக்கப்பட்டன.
இந்த அழிவின் அடையாளங்கள் பன்னிரெண்டு ஆண்டுகள்கடந்தும் கரையோரக்கிராமங்களில் அடையாளங்களாகவே காணப்படுகின்றன.
குறிப்பாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தேவைகள் அதிகளவிலே காணப்படுகின்றன.
அதாவது கடந்த 2000ம் ஆண்டுக்கு முன்பு இடம் பெற்ற யுத்தம் காரணமாக தொடரான பாதிப்புக்களை எதிர்;கொண்டு 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியினால் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டு மீண்டும் யுத்தம் காரணமாக பல்வேறு பாதிப்புக்களையும் எதிர்கொண்ட  சமுகமாகவே கரையோரச்சமுகம் காணப்படுகின்றது.
சுமார் முற்பது வருடங்களுக்கு மேலான யுத்தம் ஊர்களையே உலுக்கிய சுனாமி என அடுத்தடுத்த பாதிப்புக்கள் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை காவு கொண்டதுடன் இந்த மக்களின் வாழ்வியல் முறை வாழ்வாதாரம் என்பவற்றை சிதைத்து சின்னாபின்னாமாக்கி விட்டுள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோரப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்வாதார தொழில்களை சுதந்திரமாக செய்ய முடியாத நிலை அதாவது முகத்துவாரம் நல்லத்தண்ணித்தொடுவாய் முதல் பேய்ப்பாறைப்பிட்டி வரைக்குமான சுமார் 74 கிலோமீற்றர் கரையோரப்பகுதிகளிலும் சுனாமியால் ஏற்பட்ட அழிவுகளின் அடையாளங்கள் போரினால் ஏற்பட்ட அடையாளங்கள் இன்னும் காணப்படுகின்றன.
இது ஒரு புறமிருக்க இந்த பகுதிகளில் இப்போது கரையோர மக்கள் தமது கடற்தொழில்களை சுதந்திரமாக செய்யமுடியாத நிலை குறிப்பாக வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோத தொழில்கள் இந்திய இழுவைப்படகுகளின் தொல்லை இப்படியே இவர்களது வாழ்வாதாரத்தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.
கடந்த வாரம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தாங்கள் இது தொடர்பாக கடந்த ஏழு வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தபோதும் எந்தநன்மைகளும் கிடைக்கவில்லை.
அடுத்துவரும் புதிய ஆண்டிலே ஒரு சாத்வீக போரட்டத்தினை   நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று வடமராட்சி கிழக்குப்பகுதியிலுள்ள கடற்தொழிலாளர்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் உள்ளன. அவர்களும் தங்களுடைய தொழில்களை சீராக செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது.
இவை எல்லாவற்றையும் விட சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏராளமான வீதிகள் அழிந்தும் சிதைந்தும் காணப்படுகின்றன. இந்த வீதிகள் புனரமைக்கப்படாமையினால் அன்றாட போக்குவரத்துக்களில் சொல்லணத்துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதனைவிட ஆழிப்பேரலையாலும் யுத்தத்தினாலும் தங்களது பிள்ளைகளையும் உறவுகளையும் இழந்த நிலையில் காணப்படும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீட்டுத்திட்டங்கள் கிடைக்காத நிலையில் தற்காலிக வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையில் ஆழிப்பேரலையின் தாக்கம் என்பதுடன் அதனால் பாதிக்கப்பட்ட மக்;கள் யுத்தத்தினாலும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வாழும் ஓர் சமுகமாகவுள்ளது.
சுனாமி இது இயற்கையின் தாண்டவம் இது இன மத பேதம் பார்க்காமல் தன் கை வரிசையைக் காட்டியது. இன்றைக்கு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனித குலம் பட்டதுன்பம் சொல்லில் வடிக்கமுடியாது இன்னும் பல வேதனைகளையும் சுமைகளையும் தாங்கி நிற்பவர்கள் ஏராளம்.
பன்னிரெண்டாவது ஆண்டில் மரணித்தவர்களை வருடாவருடம் நினைவு கூருவது போல் இவ்வருடமும் நினைவுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நினைவில் கலந்துகொண்டு விட்டு எல்லோரும் விலகிச் செல்கின்றோம். இந்த பாதிப்பை எதிர்கொண்ட மக்கள் படும் அவலம் என்பது சொல்லில் அடங்காது.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம்திகதி அன்று இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட பேரழிவினால் அழிக்கப்பட்ட மனித உயிர்கள் என்பதை விட கிழக்கு மாகாணத்தில் அறுபதாயிரத்து 771 பேரும் வடக்கு மாகாணத்தில் பதினாறாயிரத்து 488
ரும் தமது வீடுளை இழந்திருந்தனர்.
இதனை விட அவர்களது வாழ்வாதாரம் வாழ்க்கை முறை என்பவற்றையும் அழித்துள்ளது. இவ்வாறு இந்த மக்களது வாழ்வியல் கட்டியெழுப்பப்படவேண்டும். இன்றும் அழிவின் அடையாளங்களாக காட்சிதரும் இடங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பது இந்த மக்களின் கோரிக்கை. யாழ் வடமராட்சி கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகளில் வருடாந்தம் இறந்தவர்களுக்கு அஞ்சலிகள் இடம்பெறுகின்றன.
பலர் வருகின்றனர் வாக்குறுதிகளை வழங்குகின்றனர் அவர்கள் போய் விடுவார்கள் எல்லலாம் அப்படியே இருக்கும் இந்த ஆண்டிலும் அப்படித்தானோ தெரியவில்லை நல்லாட்சி அரசில்பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தக்காலத்தில் எங்களுக்கும் நல்வழி பிறக்குமா என்பதே இழப்புக்களை சந்தித்த மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.
n10