நாகசைதன்யா- சமந்தா திருமண அறிவிப்பு ?
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கு காதலன் இருக்கிறார் என்ற சொன்னதிலிருந்து இளம் நடிகர் நாகசைதன்யாவை தான் காதலிக்கிறார் என்று வதந்திகள் பரவித்தொடங்கியது. இருவரும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
நாக சைதன்யாவின் தந்தையும், பிரபல நடிகருமான நாகார்ஜுனா விரைவில் தன் மகன் திருமணத்தேதியை அறிவிப்பார் என்று சமீபத்தில் கூறியுள்ளார்.
இருவீட்டிலும் திருமணம் குறித்த முன் ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாம். டிசம்பரில் திருமணம் என்றும் ஆகஸ்டில் அறிவிப்பார்கள் எனவும் கூறப்படுகின்றது.
சமந்தா இதற்காக படவாய்ப்பை குறைத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
N5




